பிரியந்தவின் படுகொலை தொடர்பில் பாக் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய தொழிற்சங்கம்!

பிரியந்தவின் படுகொலை தொடர்பில் பாக் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய தொழிற்சங்கம்!

பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தில் மிக துரதிர்ஷ்வசமாக படுகொலை செய்யப்படட இலங்கை புலம்பெயர் தொழிலாளரான பிரியந்த குமாரவிற்கான நட்டஈடு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பில் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் பாக் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

எதிர்பாராத சூழ்நிலையில் பிரியந்த படுகொலை செய்யப்பட்டமையினால் ஆதரவிழந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புலம்பெயர் தொழிலாளர் மீது அக்கறை கொண்ட ஆண்டு என்ற வகையல் போதிய இழப்பீடு வழங்குமாறும் தனியார் தொழிற்சாலையான ராஜ்கோவில் 11 வருட சேவை செய்தமைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் இழப்பீடு என்பவற்றை வழங்குமாறு அந்நிறுவன உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுக்குமாறும் பாக் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் தொழிற்சாலையான ராஜ்கோ விளையாட்டு உபகரண உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய பிரியந்த குமார தியவடன என்ற இலங்கையரை மிகவும் கொடூரமான முறையில் கடந்த 3ம் திகதி கொலை செய்யப்பட்டதையடுத்து உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் மிகவும் கௌரவத்துடன் நினைவு கூறுகிறோம்.

நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரான தியவடன தனது மத நிந்தனைக்காக இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.. அந்த கொடூரமான படுகொலையை நாம் வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, அனைத்து விதமான மத தீவிரவாதங்களையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை, சம்பவம் தொடர்பில் உடனடியாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தௌிவுபடுத்தியமை மற்றும் மற்றும் , "சியால்கோட்டில் தீவிரவாதிகளால் பிரியந்த தியவடன கொல்லப்பட்டது குறித்து இலங்கை மக்களுக்கு நமது நாட்டின் வெட்கத்தையும் வெறுப்பையும் தெரிவிப்போம்" என்று டிவிட்டர் பதிவில் நீங்கள் கூறியிருந்தமை எ ன்பவற்றை நாம் மரியாதையுடன் இப்போது நினைவு கூறுகிறோம்.

அனைத்து நாடுகளின் தொழிற்சங்க அமைப்பின் முன்மொழிவுகள் மற்றும் ILOவின் 'கண்ணியமான வேலை' க்கான செயற்பாட்டினூடாக உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்க மயமாதல் மற்றும் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளல் ஜனநாயக செயற்பாடு என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சார்க் பிராந்திய நாடுகள் உத்தரவாதமளித்தல் அவசியம் என்பதையும் இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதன்படி, எங்கள் பிராந்திய உற்பத்தி செயல்பாட்டில் உள்ள "தீவிரவாதம்" மற்றும் "அராஜகத்தை" ஒழிக்க, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ஏனைய சார்க் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image