பொதுவிடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிடின் சட்டநடவடிக்கை

பொதுவிடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிடின் சட்டநடவடிக்கை

பொதுவிடங்களில் சுகாதார நடைமுறைகளை தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், விழாக்களின் போது உணவு,பானங்களை வழங்கும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய செயற்படுகின்றனவா என்பது குறித்து ஆராயும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பூராவும், மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட நடவடிக்கை ஆரம்பியுள்ளதாகவும், உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவௌியை கடைப்பிடிக்காதவர்கள், சுகாதார ஆலோசனைளுக்கமைய செயற்படாத அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் கடந்த ஒரு வார காலமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றாமை கண்டறியப்பட்டதாகவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஒரு வார காலத்தினுல் 437 தனிநபர்களுக்கு எதிராகவும், 39 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இன்னும் கொவிட் 19 அச்சுறுத்தல் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ள பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பண்டிகைக் காலத்தில் கொள்வனவுக்காக செல்லும் மக்கள் சுகாதார வழிமுறைகளை ஒழுங்கான முறையில் பின்பற்றுமாறும் சமூக இடைவௌியை சரியான முறையில் பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image