அரச சேவைக்கு 2022இல் புதிய ஆட்சேர்ப்புக்கு அனுமதியில்லை- நிதியமைச்சர்

அரச சேவைக்கு 2022இல் புதிய ஆட்சேர்ப்புக்கு அனுமதியில்லை- நிதியமைச்சர்

2022ல் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும், ஜனாதிபதி முன்னிலையில் செல்லும்போது, வாகனம் மற்றும் பணிக்குழாம் என்பன கோரப்படுகிறன. அதனை கட்டாயமாக மட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அடுத்த ஆண்டில், எந்த வகையிலும், புதிய வாகனங்களுக்கும், பணிக்குழாமினர் நியமனத்திற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதனால், புதிய பணிக்குழாமினரைக் கோர வேண்டாம்.

இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த வருடம், தற்போது இருக்கின்ற பணிக்குழாமினருடன், முகாமைத்துவம் செய்ய வேண்டும். அவசியத்தன்மையைப் பார்க்கும்போது, பல எண்ணிக்கை அதிகமாகும்.

பிரதேச செயலகங்களுக்கு சென்று பாருங்கள், உத்தியோகத்தர்கள் அமர்வதற்கு கதிரை இல்லாத நிலைமை அங்குள்ளது.

இந்த நிலையில், மேலும் பணியாளர்களை அதிகரிப்பதனால், எந்தவொரு செயற்திறனும் கிடைக்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image