பயிலுநர் பட்டதாரிகளும் ஆசிரியர் கனவும்

பயிலுநர் பட்டதாரிகளும் ஆசிரியர் கனவும்

பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக சங்கம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில், பயிலுனர் பயிற்சிகளை 6 மாதங்களினால் நீடிப்பதற்கு அமைச்சரவையினால் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறாக 6 மாதங்களில் நீடிப்பதன் காரணமாக பயிலுனர்கள் கடும் உளவியல் ரீதியான மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அந்த சந்தர்ப்பத்திலேயே நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறியப்படுத்திருந்தோம்.

அத்துடன், இந்த நிலைமை தொடர்பில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான ஜனக்க பண்டார தென்னகோனுக்கும் விரிவாக விளக்கமளித்து இருந்தோம். இதன் பிரதிபலனாக மூன்று மாதங்களுக்குள் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரியப்படுத்திய திரும்பினர் மூன்று மாதங்களுக்கு நிரந்தர படுத்துவதற்காக விசேட அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பின்னர் அந்த அமைச்சரவை உப குழுவுடன் நாங்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அத்துடன் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்தோம்.

இதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கடந்த 10ஆம் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக, ஜனவரி முதலாம் திகதி முதல் பயிலுனர்களை நிரந்தரமாக்குவதாக எமது சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அத்தீர்மானம் நடைமுறையாகும் என வரவு செலவுத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போது பயிற்றுநர்களில் 18,000 பேரளவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாறு கோரப்பட்டதற்கமைய 30,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள உள்ளதாக யோசனை முன்வைக்கப்பட்டது.

தற்போது வரையில் மாகாணசபை ஆசிரியர் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்காக சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாங்கள் தொடர்சசியாக கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதன் இறுதிப் பேச்சுசவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர், பயிலுனர்கள் 23,000 பேரளவில் ஆசிரியர் சேவைக்கும், 7000 பேரளவில் ஏனைய சேவைகளுக்கும் ஆட்சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதன்போது அவர். பயிலுனர்கள் 23,000 பேரை ஜனவரியில் ஆட்சேர்ப்பு செய்வதாகவும், ஜனவரி முதல் விண்ணப்பம் கோரி , நேரமுகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை என்பனவற்றின் மூலம் மாத்திரம் ஆட்சேர்ப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறான தகவல் எமக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், வேறு சங்கத்துடன் கல்வி அமைச்சின் செயலாளரினால், இதற்கு முரணான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

60,000 அளவில் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்களே, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகு அவசிமான நடவடுக்கையை எடுப்பதற்கு பதிலாக, தற்போது யோசனை தெரிவிக்கப்பட்டுள்ள 23,000 பேரை ஆட்சேர்க்கதற்கு அமைவாக இந்த ஆட்சேர்ப்பு செய்வதாக கூறுகின்றனர,

எனினும், 2018, 2019 ஆண்டுகளுக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சங்கங்கள் கல்லி அமைச்சின் செயலளார் உள்ளிட்டோருடன் கலந்துரையாடயதாக அவர்கள் கூறுவது எம்மால் அவதானிக்க முடகிறது.

எனினும், ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படவுள்ள 23,000 பயிலுனர்களில், 2019, 2018, 2016, 2015, 2012, 2005 ம் ஆண்டுகளில் ஆட்சேர்க்ப்பட்டு, தற்போது நிரந்தர அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளீர்க்குமாறு அவர்களினால் கோரப்பட்டுள்ளதாக வௌியிடப்பட்டுள்ள கடதம் அதற்கு சான்றாகும்.

தற்போது நிரந்தர அரச சேவையில் உள்ள அபிவிருத்தி அதிகாரிகளுக் ஆசிரியர் நியமனம் வழங்குவதில் எமக்கு பிரச்சினை இல்லை. அந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம வழங்க வேண்டும என்று நாங்கள் கோரியுள்ளதுடன், அதனை பயிலுனர் நியமனத்துடன் முரண்படுத்திக் கொள்ளாது நடவடக்ைக எடுக்க வேண்டும் என சங்கம் என்ற அடப்படையில் நாம் தெரியப்படுத்துகின்றோம்.

எனினும். பயிலுனர்களுக்கு நியமனம் வழங்கும்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் குழப்பிக்கொண்டு, ஆசிரியர் நியமனம் வழங்குவதை, கல்வி அமைச்சன் செயலாளர் மற்றும் ஏனைய சில பயிலுர்களுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தை பிரச்சினைக்குரியதாக்கி உளளமை தௌிவாக தெரிகிறது.

பயிலுனர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதும் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதும் வெவ்வேறாக இடம்பெற வேண்டும். அதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. இது சிறு பிள்ளைக்கும் விளங்கும் விடயமாகும்.

 எனினும் ஆரம்பம் தொடக்கம் சில சங்கங்கள் மற்றும் சில அதிகாரிகள் பயிலுநர் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதை திசை திருப்ப எதிர்பார்த்துள்ளன.

இச்செயற்பாட்டை குழப்பி, அரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். பயிலுநர் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதல்ல என்பது அனைவருக்கும் விளங்கும் விடயமாகும்.
அனைத்து பயிலுநர் பட்டதாரிகளும் பயிலுநர்களுக்கான சந்தர்ப்பத்தை வெற்றிக்கொள்ள இணைவது அவசியமில்லையா?

பயிலுனர்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் ஆரம்பம் முதலே தலையிட்டு பலவற்றைத் தீர்த்து, பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து உறுதியாகவும் வலுவாகவும் நின்ற உங்களுக்கு சங்கம் என்றவகையில் நாம் தொடர்ந்து துணை நிற்போம்.

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஏற்கனவே பல விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்கால நடவடிக்கை குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மூலம் : Association of Trainee Graduates 2020/2021 face book page

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image