ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேராவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இக்கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் வருமாறு,

  • ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதி பாடசாலை விடுமுறைக் காலமாக கொண்டு செயற்படுதல்.
  • 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருந்தபோதிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 22, 23ம் திகதிகளில் விடுமுறை தொடர்பான தீர்மானத்தை வழங்கல்.
  • பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பயிற்சிகளில் பங்குபற்றாத ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கல்.
  • இணங்கியமைக்கு அமைவாக மூடிய சேவையாக ஆசிரியர் சேவையை வர்த்தமானியில் வௌியிடுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தல்.

 போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படடதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image