பொதுவிடங்களுக்கு செல்ல சட்டரீதியாக தடைக்கு அனுமதி!

பொதுவிடங்களுக்கு செல்ல சட்டரீதியாக தடைக்கு அனுமதி!

கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொள்பவர்கள் இனிமேல் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிப்பதற்கு சட்டரீதியான அனுமதி கிடைத்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றில் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கருத்து வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அதற்கான அனுமதியை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். கடந்த வாரம் நான் அவருடன் கதைத்தபோது இரு தடுப்பூசிகளும் செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடை செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என்று வினவினேன். அவ்வாறு செய்ய முடியும் என்று இன்று அனுமதி கிடைத்துள்ளது. சட்டரீதியாக அந்நடவடிக்கையை மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன். உலகில் அபிவிருத்தியடைந்த பல நாடுகள் இதனை செய்துள்ளன. செயலியொன்றை உருவாக்கி அதனூடாக இரு தடுப்பூசிகளையும் பெறாதவர்களை பொதுவிடங்களுக்கு செல்வதை தடை செய்ய சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அதற்கும் நீதிமன்றம் செல்வார்கள். வேறுவழியில்லை.த முகங்கொடுத்தாகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image