அரச-தனியார் துறை ஊழியர்களின் வேதனம் குறைக்கப்படுமா? அரசாங்கம் விளக்கம்

அரச-தனியார் துறை ஊழியர்களின் வேதனம் குறைக்கப்படுமா? அரசாங்கம் விளக்கம்

அரச மற்றும் தனியார் துறையில் எந்தவொரு ஊழியரினதும் வேதனத்தைக் குறைப்பதற்கு

தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கொவிட்-19 நிதியத்துக்காக, அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் வேதனத்தில் ஒரு தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல்வாதியும் இதற்கான யோசனையை முன்வைக்கவில்லை என்றும், கோரிக்கையையே விடுத்துள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
 
எந்த விதத்திலும் அழுத்தம்கொடுத்து எவரினதும், வேதனத்தைக் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான அனைத்து ஊடக செய்திகளையும் தாம் பொறுப்புடன் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image