பயிலுனர்களை 5 நாட்கள் சேவைக்கு அழைக்கும் தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை

பயிலுனர்களை 5 நாட்கள் சேவைக்கு அழைக்கும் தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை
சுற்றறிக்கையை கருத்திற்கொள்ளாது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சேவையில் இணைக்கப்பட்ட பயிலுனர்களை ஐந்து தினங்களுக்கு சேவைக்கு அழைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
 
ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தில் பயிலுனர் ஒன்றியத்தினால் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சங்கத்தின் தலைவர் லக்மால் திசாநாயக்கவினால் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
 
கடந்த 18ஆம் திகதி உங்களால் முன்வைக்கப்பட்ட கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் சமூர்த்தி பொது வங்கி / வங்கி சங்க கடமையல் ஈடுபடுவதற்கும் மற்றும் சேவைகளை வழங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய பொது ஆலோசனை கோவை ஒன்று வெளியிடப்பட்டது.
 
அரச நிர்வாக அமைச்சினால் கடந்த 6ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதம் மூலம் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
 
அதற்கமைய அந்த சுற்றறிக்கையில் இரண்டாம் சரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆகக்குறைந்தது மூன்று நாட்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்து ஆலோசனை பயிலுனர்களுக்கும் ஏற்புடையது என்பதை புதிதாக குறிப்பிட வேண்டியதில்லை.
 
இவ்வாறிருக்கையில், உங்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வங்கி சேவைக்காக இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் / கணினி பயிலுனர்களை 5 நாட்கள் சேவைக்கு அழைக்குமாறு அரியப்படுத்தப்பட்டுள்ளது.
 
கொவிட் பரவலானது தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கிற சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிருக்கும் ஆபத்து நிலை உள்ளது.
 
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்தி அரச சேவைகள் அமைச்சின் சுற்றறிக்கைகள் உள்ளவாறு சேவைக்கு அழைக்கவேண்டிய நாட்களுக்கு அமைய பயிலுனர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image