தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் முதலாவது தொழிற்சங்க பெண் பிரதிநிதி!

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் முதலாவது தொழிற்சங்க பெண் பிரதிநிதி!

தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தரும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக பெண்ணொருவர் கலந்துகொண்டுள்ளார்.

இருபது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுவஸ்த்திக்கா ஆருலிங்கம் கலந்துகொண்டுள்ளார்.

 தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்போடு இணைந்த தொழிற்சங்களில் ஒன்றான வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளரான சுவஸ்திக்கா ஆருலிங்கம்,, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் தொழிற்சங்கப் பிரதிநிதியாக கலந்துகொண்ட அனுபவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்கையில், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் எந்தவொரு பெண் பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இரு பெண்கள் என்னை தவிர இருவர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் தொழிற்திணைக்களம் மற்றும் பொருளாதார ஊக்குவிப்புச்சபை ஆகியவற்றின் அதிகாரிகள் என்று தெரியவந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு தன்னை பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர் , பெண்கள் தலைமையிலான தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இதுவரை சுட்டிக்காட்டாத பல பிரச்சினைகள் தொடர்பில் தான் கதைத்ததாகவும் சபையின் முன் கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு ஏனைய தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image