சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை!
சுகாதாரத்துறை பணியாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்தக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
சுகாதாரத் துறை பணியாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினை, கொடுப்பனவு பிரச்சினை மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பான பிரச்சினை என்பனவற்றை தீர்ப்பதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் கடந்த ஆட்சி மாற்றத்துடன் சீர்குலைந்து போயுள்ள நிலையில், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உடனடியாக சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.