வேலையற்ற பட்டதாரிகளின் தகவல்கள் அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

வேலையற்ற பட்டதாரிகளின் தகவல்கள் அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு

வேலையற்ற பட்டதாரிகள் குறித்த தகவல்கள் சேகரிப்பிற்கான கால எல்லை த​ற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நீடிக்கப்பட்டுள்ளது என்று வேலையற்ற பட்டதாரிகள் மையம் அறிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையம் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பன உள்ளடக்கப்பட்ட முழு விபரக்கோவையொன்றை வரவு செலவு முன்மொழிவுக்கு பட்டாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பெற்றுத்தருவதாக இணங்கியுள்ளோம்.

அதற்கமைய, தகவல்கள் சேகரிப்பு கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயமே. தனியார் பத்திரிகைகளில் விளம்பரமிடப்பட்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று காரணமாக தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை, தபால் நிலையங்களில் கடிதங்கள் பொறுப்பெடுக்காமை, பட்டதாரிகள் தனிமைப்படுத்தப்பட்டிருத்தல், பட்டதாரிகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை மற்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களினால் இம்மாதம் 16ம் திகதிக்கு முதல் தகவல்கள் அனுப்ப முடியாத நிலைக்கு பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு தகவல்கள் பெற்றுக்கொடுப்பதற்கான காலப்பகுதியை இம்மாதம் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று காலப்பகுதியில் உரிய தகவல்களை வழங்குவதில் வழங்க முடியாது போயுள்ளமையினால் இம்மாதம் 23ம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று வேலையற்ற பட்டதாரிகள் மையம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image