வீட்டுப்பணிப்பெண்களை உரிமையை உருவாக்க புதிய சட்டம் விரைவில்!

வீட்டுப்பணிப்பெண்களை உரிமையை உருவாக்க புதிய சட்டம் விரைவில்!

வீட்டுப்பணிப்பெண்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் உருவாக்குவது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அச்சட்டத்திற்குள் வீட்டுப்பணிப்பெண்களுக்கான சட்டத்தையும் இணைப்பது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அதில், வீட்டுப்பணிப்பெண்களுக்கு சம்பள நிர்ணய சபை, , ஆகக்குறைந்த சம்பளம், ETF EPF, வரவுசெலவு சலுகைக் கொடுப்பனவுகள் உட்பட உட்பட பல விடயங்கள் இச்சட்டத்தின் கீழ் உள்வாங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது எமது தொழிற்சங்கத்தின் நீண்டகால முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கடந்த இம்மாதம் 8ம் திகதி தொழில் அமைச்சர் வீட்டுப்பணிப்பெண்கள் உரிமை தொடர்பில் பாராளுமன்றில் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image