பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ப்பிக்கலாம்!

பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ப்பிக்கலாம்!

வட மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வினூடாக தகுதியுள்ள பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று வட மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட, இம்மாதம் 31ம்திகதிக்கு 18 வயது குறையாத 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகள் மற்றும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும்.

வட மத்திய மாகாணத்தில் உள்ள 7 கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் 233 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று மாகாண அரச சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image