அதிபர் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு வரவு செலவு திட்டத்தினூடாக தீர்வு

அதிபர் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு  வரவு செலவு திட்டத்தினூடாக தீர்வு

அதிபர் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் வரவுசெலவு திட்டத்தினூடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் நிதியமைச்சருடன் கலந்துரையாடியபோது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை விரைவில் வழங்குமாறு நியமிக்கப்பட்ட குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் தொற்று நிலை காரணமாக இப்போதைக்கு பாடசாலை ஆரம்பிக்க முடியாது என்றும் நிகழ்நிலை கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டாம் என்றும் கல்வியமைச்சர் அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கபொத உயர்தர பரீட்சையில் தோற்றிய 622,000 மாணவர்கள் பெறுபேறுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எனினும் கலை தொடர்பான செயன்முறை பரீட்சையை நடத்தாமல் ஆசிரியர் போராட்டம் நடத்துவதால் பெறுபேறுகளை வௌியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 வருடங்களாக நிலவிய பிரச்சினைக்கு இதுவரை எடுக்காத கடுமையான நடவடிக்கையை முன்னெடுதது மாணவர்களை கஷ்டத்துக்குள்ளாக்க வேண்டாம் என்றும் இதன்போது அமைச்சர் கோரியுள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை தேர்வுகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களை அழுத்தங்களுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அமைச்சர தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image