ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்க நிதி இல்லை: அமைச்சரவை புதிய முடிவு

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்க நிதி இல்லை: அமைச்சரவை புதிய முடிவு
ஆசிரியர், அதிபர்களினால் தற்போது நாட்டின் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களால் கலந்துரையாடப்பட்டது.
 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இதற்கமைய இன்று அனைத்து தொழிற்சங்கங்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அமைச்சரவை உப குழு, கல்வித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது அரசாங்கம் கொள்கை அடிப்படையில், ஆசிரியர் அதிபர்களுக்கு  நிலவும் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதன்போது சம்பளம் அளவு எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.  இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
 
எனவே, நாட்டின் தற்போதைய நிதி நிலைமைக்கு மத்தியில் குறித்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நிதிவளம்  தற்போது அரசாங்கத்திற்கு உடனடியாக இல்லை. எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.  
 
எனினும், அடுத்த வரவு-செலவு திட்டத்தில் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  நிதி அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. எனவே ஆசிரியர் அதிபர்கள் தற்போது முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு, மீண்டும் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக  அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image