வீட்டுப் பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் தொழில் அமைச்சரிடம் கையளிப்பு

வீட்டுப் பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் தொழில் அமைச்சரிடம் கையளிப்பு

இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது பரிந்துரைகளை,

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொழில் அமைச்சின் அலுவலகத்தில் வைத்து நேற்று (02) முற்பகல் கையளித்தார்.

  •  வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதினை 18 ஆக ஆக்குதல்
  • 85000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்
  • வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி / ஊழியர் சேமலாம நிதியத்தை உருவாக்குதல்
  • ஹிஷாலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல்
    உள்ளிட்ட பரிந்துரைகள் கலாநிதி சுரேன் ராகவனால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - நியூஸ்.எல்கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image