தடுப்பூசி வழங்கப்பட்டபின்னர் பாதிப்புக்குள்ளான ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தடுப்பூசி வழங்கப்பட்டபின்னர் பாதிப்புக்குள்ளான ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

19 தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையயில் பணியாற்றும் சுமார் 100 ஊழியர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகளையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக விசாரணைகளில் அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படாமல் தனியார் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த 27ம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சனித் பெதுருஆராய்ச்சி குறித்த தடுப்பூசி குறித்து எதுவித தகவலும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் சுமார் 90 பேர் வரை 28ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 29ம் திகதியும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் டொக்டர் பெதுருஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்திடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பில் தமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளேவிடம் வினவியபோது அவரும் அவ்விடயம் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிருவாக அதிகாரிகள் அங்கத்தவர் டொக்டர் பிரசாத் கொலம்பகே கருத்து தெரிவிக்கையில், சுகாதார அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்கப்படாமல் தடுப்பூசி வழங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் குறித்த தொழிற்சாலை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் உடனடியாக சுகாதார அமைச்சுக்கு சுகாதார வைத்திய அதிகாரி தெரியப்படுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.

சிலோன் டுடே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image