ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தடுப்பூசி ஏற்றும் காலம் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தடுப்பூசி ஏற்றும் காலம் அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
கல்வி அமைச்சில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
 
நேற்று மாலை ஜனாதிபதியுடன் மிகவும் முக்கியமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைத்திருக்க முடியாது  என்ற விடயம் தொடர்பில் இதன் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
 
இதற்கமைய சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 மாணவர்களுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதனை செயல்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது மிகவும் அத்தியாவசியமானதாகும். நாட்டில் 242,000 ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
 
அடுத்த வாரம் முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வழங்குவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.  இந்த வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதன் மூலமாக, ஆசிரியர்களுக்கு தைரியம் கிடைக்கின்றது. அத்துடன், தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மனதில் பயமின்றி இருப்பதற்கு பெற்றோர்களுக்கும் சக்தி கிடைக்கின்றது  என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image