டொலருக்கு நிகரான ரூபாவின் விலை தளம்பல்: சந்தையில் நடப்பது என்ன?

டொலருக்கு நிகரான ரூபாவின் விலை தளம்பல்: சந்தையில் நடப்பது என்ன?

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி, பாரியளவில் தளம்பல் அடைகின்றமை, நாட்டின் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

200 ரூபா என்றிருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி, 191 ரூபா 88 சதமாக திடீரென உயர்வடைந்திருந்தது. கடந்த 20ஆம் திகதி சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையுடன் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி தற்போது 200 ரூபா வரையில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தளம்பல் அடைவது தொடர்பில், வயம்ப பல்கலைகழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேராவிடம் வினவியபோது,

டொலரின் விற்பனை பெறுமதி 204 ரூபாவாக அதிகரித்த சந்தர்ப்பத்தில், அரசாங்கம், சீனாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற்றதால், தற்காலிக விநியோகம் அதிகரித்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில், நாளை மேலும் ஒரு தொகை கடனை பெற முடியாது. இது, தற்காலிக வழிமுறையாக அரசாங்கம் பெற்றுக் கொண்டதாகும். இதேநேரம், அரசாங்கம் சந்தைக்கு டொலர்களை விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனுடன் விலை கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், டொலரின் பெறுமதி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு வியூக ரீதியான மாற்றத்திற்கு சென்று டொலரின் கேள்வியை குறைக்க வேண்டும் அல்லது வழங்கலை அதிகரிக்க வேண்டும் என்று வயம்ப பல்கலைகழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்தார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தளம்பல் அடைகின்ற சந்தர்ப்பத்தில், பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு காரணமாவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டொலருக்கும் செலுத்தவேண்டிய ரூபாவின் பெறுமதி அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின்து விலையும் 50 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும்.

சில பொருட்களின் விலை அதிகரிக்கப்படாவிட்டாலும், இறக்குமதியின் உண்மைநிலை இதுவேயாகும் என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதை நிலைமைக்கு மத்தியில், அமெரிக்க டொலரை விற்பனை செய்வதன் மூலம், வணிக வங்கிகள் அதிகளவில் இலாபம் ஈட்டுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வணிக பீடத்தின் அநுரகுமார உத்துமன்கே தெரிவித்துள்ளார்.

டொலரின் விற்பனை பெறுமதி, 195 ரூபாய் என மத்திய வங்கி அறிவித்திருந்த சந்தர்ப்பத்தில், 200 ரூபாய்க்கும் அதிகளவிலேயே வணிக வங்கிகள் சந்தையில் அதனை விற்பனை செய்தன. சில வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகளுக்கு இடையிலான வித்தியாசம், 13 ரூபாய், 12 ரூபாய், 11 ரூபாய் என்றவாறு  காணப்பட்டது.

நூற்றுக்கு 3 சதவீதமாக வட்டி வீதம் குறைக்கப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், டொலரின் விற்பனை மற்றும் கொள்முதல்  பெறுமதிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை 13 ரூபாவாக வணிக வங்கிகள் தக்கவைத்திருப்பது, பாரிய அளவிலான லாபத்தை நோக்கமாகக் கொண்ட செயற்பாடாகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கிக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவொரு இயலுமையும் ஏற்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வணிக பீடத்தின் அநுரகுமார உத்துமன்கே தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image