ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு- எஞ்சியோருக்கான வாய்ப்பு எப்போது?

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு- எஞ்சியோருக்கான வாய்ப்பு எப்போது?

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பில் 38,000 பேருக்கு இதுவரையில் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 62,000 பேருக்கு எப்போது தொழில்வாய்ப்பை வழங்குவீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

கடந்த தேர்தல் காலத்திற்கு முன்னர் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு திட்டத்தின் கீழ், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஒரு தரப்பினர் பட்டியல்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் சுமார் 38,000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன அதாவது சாதாரண தரம் சித்தியடையாத தரப்பினருக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் தேர்தலுக்கு முன்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகமைகள் பரிசோதிக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்ட பட்டியலில், உள்ளவர்கள் அதன்பிறகு நியமனம் வழங்கப்பட்டவர்களில் இல்லை.

எனவே இதிலிருந்து விடுபட்டு தரப்பினர் தொடர்பில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? எஞ்சியுள்ள 62,000 பேருக்கு நியமனம் வழங்கும்போது இவர்களுக்கு எவ்வாறான முன்னுரிமை வழங்குவீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,

38,000 பேர் இதுவரையில் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சம் பேர் வரையில் ஆட்சேர்க்கப்பட உள்ளனர். எனவே, தங்களின் பெயர் இல்லை, தங்களது பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, அரசியல் காரணங்களின் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்டுள்ளது என்று எவரும் குற்றம் சுமத்த முடியாது.

மிகத்தெளிவாக பத்திரிக்கையில் விளம்பரப்படுத்தி, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தக் கிரம முறைக்கு அமையவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 38,000 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதாக அவரே கூறியிருக்கிறார். எனவே, எஞ்சிய தரப்பினர் அந்த எண்ணிக்கையில் இருக்கலாம்.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் சரத் வீரசேகரவிடம் இதுகுறித்து வினவினால் தெளிவான பதிலை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image