கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை- அரச வங்கி ஊழியர்கள் சங்கம்

கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை- அரச வங்கி ஊழியர்கள் சங்கம்

வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை அரசாங்கம் செய்ய தவறினால் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி அனைத்து அரச வங்கிகளின் தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

நேற்று (08) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் நேற்று (08) லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் போராட்டம் நடத்தியுன

பொலிஸாரின் தொடர்ச்சியான தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சுபுன் ஜீவனந்தவிடம் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. குறித்த மனுவை வெகு விரையில் ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குற்படுத்துதாக இதன்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் உறுதியளித்தார்.

 அத்துடன் ஜனாதிபதியின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய வங்கி ஊழியர்கள் ஓய்வூதியம், வங்கி ஊழியர்களுக்கு வழங்குவது அவசியம் என்பதுடன் அதற்கமைய நிதியமைச்சிற்கு குறித்த விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வேண்டுமென்றே தாமதமாக்கி வருவதாகவும் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் விமல் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை நிலைமை ஏனைய தனியார் வங்கிகளிலும் ஏற்பட்டுள்ளதாகவும் அரச கொள்கைகளுக்கமைய வங்கி முகாமையாளர் செயற்படுவதில்லை என்றும் இலங்கை வங்கி கிளைச் சங்கத்தின் தலைவர் பாலித்த அட்டம்பாவல தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், மக்கள் வங்கி கிளையின் தலைவர் சாந்தர கங்கபடகே கருத்து தெரிவிக்கையில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவது தொடர்ச்சியாக பிற்போடப்படாமல் உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பண்டிகைக்காலத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரச்சினைக்குள் தள்ளுவதை வங்கியாளர்கள் என்றரீதியிலும் பொறுப்பான சங்கம் என்றவகையிலும் நாம் விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

த லீடர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image