இரண்டாம் தடுப்பூசி ஏற்றத்திற்காக காத்திருக்கின்றீர்களா? இதோ அறிவித்தல்

இரண்டாம் தடுப்பூசி ஏற்றத்திற்காக காத்திருக்கின்றீர்களா? இதோ அறிவித்தல்

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா - கொவிஷீல்ட் 2ஆம் தடுப்பூசி ஏற்றம், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (08) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த ஜனவரி 29ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதிவரை முதலாவது கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 9 இலட்சத்து 24 ஆயிரத்து 687 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின்படி, முதல் தடுப்பூசி ஏற்றத்தை அடுத்து, 12 வாரங்களின் பின்னர், இரண்டாம் தடுப்பூசி ஏற்றத்தை மேற்கொள்வதே, செயலாற்றல் மிக்கதாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அஸ்ட்ராசெனகா - கொவிஷீல்ட் 2ஆம் தடுப்பூசி ஏற்றம், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

முதல் கட்டத்தில், முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர், உரிய கால எல்லையின் அடிப்படையில், சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்படும்.

இதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால், 3 இலட்சத்து 56 ஆயிரத்து 730 ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

9 இலட்சத்து 24 ஆயிரத்து 687 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கமைய, 5 இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் அவசியமாக உள்ளன. அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக, அரச ஒளடத கூட்டுத்தாபனம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து பணியாற்றுகின்றது.

எதிர்வரும் சில வாரங்களில் அந்தத் தடுப்பூசித் தொகை கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா - கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு, இரண்டாம் முறையும் அதே தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

எனவே, அஸ்ட்ராசெனகா - கொவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்யும், இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image