பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கோரும் போராட்டத்திற்கு அழைப்பு

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கோரும் போராட்டத்திற்கு அழைப்பு

பயிற்சிக்காக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு மாத காலத்துக்குள் நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான மகஜரில் கையொப்பமிட்டு, போராட்டத்தை வெற்றிகொள்ள ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 செப்டெம்பர் முதலாம் திகதி ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளும், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி அறிவிக்கப்பட்ட பட்டதாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆறு மாத காலத்துக்குள் நிரந்த நியமனம் பெறுவதற்கான ஏதாவது தலைவி தலையீடுகளை நாங்கள் செய்ய வேண்டும்.

தற்போது எங்களுடைய ஏழு அடிப்படை கோரிக்கைகள் அடங்கிய மகஜர் உங்களது காரியங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கும். அது கிடைக்காவிட்டால் எங்களுக்கு அழைத்து அதனைப் பெற்றுக்கொண்டு உங்களது கையெழுத்தையும் அதில் இடுங்கள்.

இது தொடர்பான ஏதேனும் தகவல் அறிந்து கொள்ள வேண்டுமாயின் தம்மிக முனசிங்க 0714176030 அதுமட்டுமன்றி எமது அமைப்பின் தலைவர் லக்மாலும் உங்களுக்கு உதவி செய்வதற்காக தயாராக இருக்கின்றார்.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கும் நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளையும் தகவல்களையும் அனுப்ப முடியும். அதுமாத்திரமன்றி எங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி எமது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம். – என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image