ஆயிரம் ரூபா வழங்கப்படாவிடின் சட்ட நடவடிக்கை

ஆயிரம் ரூபா வழங்கப்படாவிடின் சட்ட நடவடிக்கை

 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படாவிடின் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்து தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் அறிவிக்கப்பட்ட விசேடவர்த்தமானி அறிவித்தல், துறைசார் அமைச்சரின் அனுமதியின் பின்னர் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10ம் திகதி வௌியிடப்பட்டது. எனவே அச்சம்பளம் வழங்கப்படாவிடின் சம்பள நிர்ணய சட்டத்தின் படி நட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க தவறுபவர்களுக்கு அபராதம் அல்லது ஆறு மாதம் வரையான சிறை அல்லது இரண்டு தண்டனைகளையும் எதிர்நோக்க வேண்டியேற்படும் என்றும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அடிப்படை சம்பளம் 900 ரூபாவுடன் பட்ஜட் கொடுப்பனவு 100 ரூபா உள்ளடங்களாக 1000 ரூபா நாளாந்த சம்பளம் சம்பள நிர்ணய சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையான பேச்சுவார்த்தையினூடாக நிர்ணயிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு தொடர்பில் ஆணையாளர் நாயகம் நடத்திய வாக்கெடுப்பில் சம்பள நிர்ணய சபைக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் இணக்கப்பாடு எட்டப்படாமையினால் தாமதமாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image