பேச்சுவார்த்தை தோல்வி: யோசனை முன்வைக்க தொழிற்சங்கங்களுக்கு ஒருவாரம் அவகாசம்

பேச்சுவார்த்தை தோல்வி: யோசனை முன்வைக்க தொழிற்சங்கங்களுக்கு ஒருவாரம் அவகாசம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைக்க துறைமுக தொழிற்சங்கங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்தது.

23 துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையில் நேற்று முற்பகல் துறைமுக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

துறைமுகத்தை நூறு வீதம் இலங்கையே நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, துறைமுக தொழிற்சங்கங்கள் நேற்று கலந்துரையாடலில் பங்கேற்றன. சுமார் 2 மணித்தியாலங்களாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அமைச்சரவை நியமித்த குழு சார்பாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரும் அமைச்சரவை நியமித்த குழுவின் தலைவருமான ஜெனரல் தயா ரத்நாயக்கவும் துறைமுக அமைச்சின் செயலாளரான யூ.டி.சீ. ஜயலாலும் மாத்திரமே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அமைச்சரவை நியமித்த குழுவின் தலைவர் பொறுப்பை இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரான ஜெனரல் தயா ரத்நாயக்க வகிப்பதுடன், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் ஆறு செயலாளர்களே அந்தக் குழுவின் உறுப்பினர்களாகவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சஞ்சீவன்,

இந்தக் கூட்டத்தில் 23 தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தோம். ஜனாதிபதியுடன் கடந்த கூட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியதன் பிரகாரம் எங்களது நிலைப்பாட்டை முழுமையாக முன்வைப்பதே இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வதன் நோக்கமாக இருந்தது. அதற்கமையவே நாங்கள் இந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.

கடந்த கூட்டத்தில் ஜனாதிபதியினால் கூறப்பட்ட விடயமானது, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 51%, இந்தியாவின் அதானி நிறுவனம் உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு 49% எனவும் கூறப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தான் இந்தக் கூட்டத்தை ஆரம்பிப்பதாக அமைச்சின் செயலாளர் கூறியிருந்தார். நாங்கள் அதனை நிராகரித்தோம்.

ஏனெனில், இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு எமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காகவே நாம் இந்த கூட்டத்திற்கு சென்றிருந்தோம். கிழக்கு முனையத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபை கையாளுவது என்பது எமது நிலைப்பாடாக இருந்தது. ஆகவே அந்தக் கூட்டம் எங்களுக்கு வெற்றியளிக்கவில்லை.

கிழக்கு முனையத்தை நாம் கையாளவேண்டும் என்பதும், எவ்வாறு கையாளவேண்டும் என்பதையும், அதில் இருக்கின்ற நன்மைகள் என்ன என்பதையும் அந்த அமைச்சரவை குழுவிற்கு எழுத்து மூலமாக வழங்குவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். அதற்கு அவர்கள் இணங்கினார்கள். எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் நாங்கள் அந்தக் குழுவிற்கு எங்களது யோசனைகளை முன்வைக்க இருக்கின்றோம். - என்று இலங்கை துறைமுக அதிகார சபையின் பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image