இடமாற்றத்தில் ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை

இடமாற்றத்தில் ஆசிரியர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை

வடக்கு மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரிய இட மாற்றத்தில், எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படாமல் அவர்களின் இவ்வருடத்திற்கான இட மாற்றம் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதம் வருமாறு,

கௌரவ ஆளுநர்,
யாழ்ப்பாணம்,
வடக்கு மாகாணம்.
18.01.2021.

இட மாற்றத்தில் ஆசிரியர்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்படாமை

வடக்கு மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரிய இட மாற்றத்தில், ஆசிரியர்கள் தமது சேவை காலத்தில் அதிகஷ்ட, கஷ்ட பிரதேசங்களில் ஆறு வருடங்களுக்கு மேல் வெளி மாவட்டங்களில சேவை ஆற்றிய போதும் எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படாமல் அவர்களின் இவ்வருடத்திற்கான இட மாற்றம் நிராகரிக்கப்பட்டது.
இவ் ஆசிரியர்களுக்கு முதல் நியமனக் கடிதத்தில் சிலருக் ஐந்து வருடங்கள் சேவையாற்ற வேண்டும் எனவும் வேறு சிலருக்கு ஐந்து வருடங்கள் மாத்திரம் சேவையாற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட போதும், ஒரு வருடம், இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள் மேலதிகமாக சேவை ஆற்றிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.

ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூயில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதன் மூலம் ஏற்படக்கூடிய ஒருதலைப்பட்ச நிலைமை ஆசிரிய தொழில் விருத்திக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதனால், பல்வேறுபட்ட பிரதேசங்கள் பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாசார சூ10ழல்களில் உள்ள கல்லூரிகளின் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் பல்வேறுபட்ட அநுபவங்களை பெற்றுக்கொண்டு தமது செயற்றிறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் இட மாற்றக் கொள்கை – சுற்றறிக்கை 2007ஃ20 – 1.6 இல் குறிப்பிடப்பட்டடுள்ளதற்கு அமைய இங்கு இட மாற்றங்கள் நடை பெறுவதில்லை. அனைத்து ஆசிரியர்களுக்கு இட மாற்றத்தின் போது, காலப் பகுப்பில் சம உரிமை – வாய்ப்பு – வழங்கப்படாமையால், இன்று கல்விச் சமூகம் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளது; எதிர்காலத்தில் இன்னும் இன்னும் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிவரும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளமையால், திருப்திகரமான கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தி நிலையை அடைந்துள்ளனர். இதனால், தேசிய ரீதியான கல்விக்கான பங்களிப்பில் எமது மாகாணம் பின்னணியில் உள்ளது.

2020.10.30 திகதி அன்று வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆசிரிய இட மாற்ற சபையில்:- முதல் நியமனக் கடிதத்தில் ஐந்து வருடங்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் ஆறு வருடங்கள் வெளி மாவட்ட சேவையைப் பூர்த்தி செய்தால், போதும் எனவும் சொந்த மாவட்டத்தில் உள்ள வலயங்களில் வெற்றிடங்கள் இல்லாவிடின் அருகில் உள்ள வலயங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவை பின்னர் நடைமுறைப்படுத்தவில்லை. ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட தொழிற்சங்கம் என்ற ரீதியில் நாம் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கின்றோம். தேசிய ஆசிரியர் இட மாற்ற கொள்கையைத் தழுவி இட மாற்றத்தை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நாட்டடின் கல்வி வளர்ச்சியில் கரிசனை கொண்ட தொழிற் சங்கம் என்ற வகையில், ஆறு வருடங்களுக்கு மேல் வெளி மாவட்ட சேவையை வழங்கி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சாதாமன தீர்வைப் பெற்றுத் தருமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

...................

இங்ஙனம், (மஹிந்த ஜெயசிங்க),

பொதுச் செயலாளர்,

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,

...................

இங்ஙனம்,

(பெ.ஸ்ரீகந்தநேசன்),

செயலாளர்,

வடக்கு மாகாணம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,

 

பிரதிகள்:-

01) அதிமேதகு ஐனாதிதபதி, இலங்கை.

02) கௌரவ கல்வி அமைச்சர், இலங்கை.

03) செயலளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம்.

04) பணிப்பாளர், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image