வடமாகாணத்திற்கு நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் இதோ

வடமாகாணத்திற்கு நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் இதோ

வடமாகாணத்திற்கு நியமனம்பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட வலய கல்வி அலுவலகத்தில் திங்கட்கிழமை நியமன கடிதத்தை பெற்று பாடசாலைக்கு சென்று கடமையேற்கலாம் என வட மாகாண கல்வி அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 386 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு வட மாகாணத்தின் கீழுள்ள 08 வலயங்களின் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தயார் செய்யப்பட்டு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் ஆசிரியர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.lk  வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.edumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும்.

எனவே நியமனம் செய்யப்பட்டுள்ள டிப்ளோமாதாரர்கள் ஆசிரிய பணிக்குரிய கௌரவத்துடன் பெண்கள் இள வர்ண சேலையுடனும் ஆண்கள் கறுப்பு வர்ண நீள் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற சட்டையும் (சேட்) அணிவதுடன் கழுத்துப் பட்டி (Tie) அணிதல் வேண்டும். 2021.01.18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தமது பெயர் நிரற்படுத்தப்பட்டுள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் தங்களுக்குரிய நியமனக் கடிதங்களை பெற்று அதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி தாம் நியமனம் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் கடமைக்கு அறிக்கையிட முடியும். தேவையான அறிவுறுத்தல்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் தமது ஆளடையாளத்தினை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டை,  செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், நியமனதாரர்கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலய ரீதியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வருமாறு

இல.     

மாவட்டம்

வலயக் கல்வி

அலுவலகம்

முகவரி

நியமிக்கப்பட்ட

ஆசிரியர்களின்

எண்ணிக்கை

1

மன்னார்

மன்னார்

மன்னார் நகரம்

            59

    

மடு

ஆண்டான்குளம்

            61

2

முல்லைத்தீவு

முல்லைத்தீவு

முல்லை மாங்குளம் வீதி, முல்லைநகர்

            64

   

துணுக்காய்

A 9 வீதி மாங்குளம்

            66

3

கிளிநொச்சி

கிளிநொச்சி

A 9 வீதி கிளிநொச்சி

            35

4

வவுனியா

வவுனியா வடக்கு

A9 வீதி புளியங்குளம், வவுனியா

            43

   

வவுனியா தெற்கு

கண்டி வீதி, வவுனியா

            26

5

யாழ்ப்பாணம்

தீவகம்

வங்காளவடி, வேலணை  

            32

மொத்தம் 

          386

 

 

தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்

சிங்கள மொழிமூல ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - முல்லைத்தீவு வலயம்

எனவே, இத்துடன் வலயயாக ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் எவ் வலயத்தின் கீழ் தமது பெயர் நிரற்படுத்தப்பட்டுள்ளதோ அவ் வலயத்திலேயே தாங்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். தமது பெயருக்கெதிரே காணப்படும் தொடர்பிலக்கத்தினைக் (Ref. No) குறித்துக் கொள்வது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாய் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image