புத்தாண்டில் ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

புத்தாண்டில் ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

புதிய ஆண்டின் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார்.

 

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, சவால்களை சரியாக புரிந்துகொண்டு, மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு நேர்மறையான அணுகுமுறையுடனும் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். பிறந்திருக்கும் 2021 புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

புதிய வருடத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் அரச சேவைக்கான உறுதி மொழி அளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் அடிப்படையில் வினைத்திறனானதும் பயனுறுதிவாய்ந்ததுமான அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

நாடு தொழில்மை தலைமைத்துவத்தை பெற்றுள்ளது. கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வந்த 'புதிய இயல்பாக்கம்' என்பதன் கீழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு அரச சேவையை ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார் என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும்இ 15 லட்சத்திற்கும் அதிகமான அரச ஊழியர்களுக்கும்இ 600இ000 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கும் எந்தவிதமான குறைப்புகளும் இல்லாமல் உரிய நேரத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கிய உலகின் ஒரே அரசாங்கம் இலங்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியாக உள்ளது. மக்களுக்காக அதிகபட்ச சேவையில் ஈடுபடுவது அனைத்து அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெலே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image