ஊழியர் சேமலாப கொடுப்பனவு செலுத்தாமை குறித்து 16,000 வழக்குகள்

ஊழியர் சேமலாப கொடுப்பனவு செலுத்தாமை குறித்து 16,000 வழக்குகள்

ஊழியர் சேமலாப கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் 16,000 வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிய நிலையில் உள்ளன என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் எதிர்காலத்தில் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் இவ்வாறான வழக்குகளை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனூடாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விரைவில் பணத்தை அறவிடுவதற்கு 1958ஆம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், நிறுவனமொன்றில் ஊழியர் ஒருவர் இணைந்து 6 மாதங்களுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கான சட்டம் விரைவில் வரவுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளான நிறுவனங்கள் பல தமது சேமலாப கொடுப்பனவை செலுத்துவதற்கான நிவாரண காலத்தை வழங்குமாறு ​வேண்டுகோள் விடுத்துள்ளன. அவற்றின் வேண்டுகோளை ஆராய்ந்து கொடுப்பனவை செலுத்துவதற்கான நிவாரண காலத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தொழில் ஆணைாயாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image