அரச - தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாவரை வீட்டுக்கடன்

அரச - தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாவரை வீட்டுக்கடன்

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசேட கடன் திட்டம்

நேற்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகர மற்றும் ஓரளவு நகர அளவிலான பிரதேசங்களை நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களில் வீடுகளை விலைக்கு வாங்குவதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடமையாற்றும் இளம் சமூகத்தினருக்கு இந்த கடன் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். இக்கடன் திட்டத்தின் கீழ் ஆகக்கூடிய தொகையாக 1 கோடி ரூபா வழங்கப்படும். திருப்பி செலுத்தும் காலம் 25 வருடங்களாகும். அரசாங்க வங்கிகள் மூலம் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image