உருமாறிய கொரோனா வைரஸ்: ஜயவர்தனபுர பல்கலை வெளியிட்டுள்ள தகவல்

உருமாறிய கொரோனா வைரஸ்: ஜயவர்தனபுர பல்கலை வெளியிட்டுள்ள தகவல்

உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்  இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura )இந்த பரிசோதனையை ஆரம்பித்துள்ளது. 

இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர இதுதொடர்பாக தெரிவிக்கையில், நாட்டில் மேற்கொள்ளப்படும் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த உருமாறிய வைரஸ் அடங்கக்கூடிய  வைரஸ் தொற்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு உலகம் முழுவதிலும் பரவிவரும் இந்த உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலே ஆரம்பமானது. இது தற்பொழுது பல உலக நாடுகளிடையே பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் இதனால் இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரஸுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை தேவைக்கேற்ற வகையில் சுகாதார பிரிவினர்களினால் தனிமைப்படுத்தப்படுவர். சரியான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தி தொற்று பரவலை தடுக்க முடியும். தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும்இ ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம் : News.lk

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image