இலங்கை வந்த உக்ரைன் சுற்றுலா பயணிகளில் மூவருக்கு கொரோனா

இலங்கை வந்த உக்ரைன் சுற்றுலா பயணிகளில் மூவருக்கு கொரோனா

நாட்டிற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த உக்ரைன் பிரஜைகளில் மூவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இவர்கள் மூவருக்கும் நேற்றிரவு (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளை மருத்துவ சிகிச்சைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைனிலிருந்து 180 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியது.

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் செயற்றிட்டத்தின் கீழ் இவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

நாட்டை வந்தடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள்  கொக்கல பகுதியிலுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image