போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள்

போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள்

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிறுவனங்கள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் அரசாங்த்திற்கு ஒழுங்காக வரி செலுத்துவதில்லை. சில சர்வதேச நிறுவனங்கள் மில்லியன் கணக்கான இலாபத்தை இதனூடாக பெறுகின்றன. அந்நிறுவனத்துக்கு உள்நாட்டு அலுவலகம் இல்லை என்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேக்கர தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு கதைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பயணிகள் மற்றும் சாரதிகள் தள்ளப்படுகின்றனர். குறித்த நிறுவனமானது இலங்கையின் அந்நிய செலாவணியில் தாக்கம் செலுத்துவதால் அரசாங்கம் அதனை பாதுகாக்கிறது.

இலங்கையில் போக்குவரத்து சேவை வழங்கும் குறித்த சர்வதேச நிறுவனமானது மாதந்தம் சுமார் 2 பில்லியன் ரூபா இலாபத்தை தனது வௌிநாட்டு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image