உக்ரைன் பிரஜையிடமிருந்து உருவான ப்ரெண்டிக்ஸ் கொத்தணி!

உக்ரைன் பிரஜையிடமிருந்து உருவான ப்ரெண்டிக்ஸ் கொத்தணி!

ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலைக்கு கொரோனா தொற்று உக்ரைன் நாட்டவரிடம் இருந்து பரவியுள்ளது என்று ஆரம்ப சுகாதாரசேவைகள் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க சபையில் நேற்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உக்ரேயின் பிரஜையொருவரினாலேயே தொற்றுக்குள்ளாகியுள்ளனர். உக்ரைன் நாட்டவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் சிலருக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் ஊழியர்களினூடாக ப்ரெண்டிக்ஸ் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் அதே வைரஸ்தான் தற்போது இலங்கையிலும் பரவி வருகிறது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது.

“இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரெண்டிக்ஸ் மற்றும் பெஹெலியகோடட கொத்தணிகளில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உடலில் வைரஸ் அதிகமாக இருப்பதைக் காணலாம், ”என்று அவர் கூறினார்.

"நாங்கள் தற்போது வைரஸ் தொற்று ஏற்படும் பகுதிகளில் எழுமாற்றாக பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். சிறிய மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் பி.சி.ஆர் சோதனை திறனை அதிகரித்துள்ளோம்.

சட்டவிரோத குடியேறியவர்களிடமிருந்து நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கடலோரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எழுமாற்றாக பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image