மகப்பேற்று விடுமுறை குறைக்கப்பட்டமைக்கு எதிராக ILO விடம் கையளிப்பு அறிக்கை சமர்ப்பிப்பு

மகப்பேற்று விடுமுறை குறைக்கப்பட்டமைக்கு எதிராக ILO விடம் கையளிப்பு அறிக்கை சமர்ப்பிப்பு

அரச சேவையில் இணைத்துத்துக்கொள்ளப்பட்ட பெண் பட்டதாரிகளுக்குரிய மகப்பேற்று விடுமுறையில் 42 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தயாரிக்கப்பட்ட கூட்டு அறிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு நேற்று (01) கையளிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி மற்றும் ஏனைய அமைப்புகளிடம் கையளிக்கும் நோக்கில் இக்கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் , மகளிர் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள இக்கூட்டறிக்கையை உலக தொழிலாளர் அமைப்பின் இலங்கைக் கிளையிடம் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று கையளித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image