சமகால அரசியல் நிலைமைக்கு மத்தியில் தொழிலாளர் வர்க்கமும். சிவில் சமூகம், பொதுமக்களும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட அறிவிப்பை தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு வௌியிட்டுள்ளது.
All Stories
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பவற்றின் காரணமாக பல சமூகங்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் எரிபொருளையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவச்சமூகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட மீனவர்கள் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக புலம்பெயரும் சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுக்கும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் கரங்கள் வலுசேர்த்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையர்கள் பொருளாதார நல்வாழ்வையும் அடைவதற்கு முன்பே முதுமையடைந்து விடுகின்றனர். ஏனெனில் காலத்துக்கு காலம் மக்கள் கடினமான பொருளாதார நிலைமைகளுடன் போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என்று பொருளாதார தரவு தளமான Charts.lk தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒரு விடயமே! இவ்வருடமும் அது கொண்டாடப்பட்டது. ஆனாலம் இது கொண்டாட்டங்களினால் உருவானது அல்ல போராட்டத்தில் தான் உருவானது பெண்களின் உரிமைக்கான ஆதியில் இருந்தே போராட்டங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன.
ஜூன் 16ஆம் திகதி சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினமாகும். இந்த நாள் உலகப் பொருளாதாரத்தில் வீட்டுப் பணியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கிறது. இந்த அத்தியாவசியத் தொழிலாளர்களுக்காக தற்போது சர்வதேச தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் அழைப்பு விடுக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) 189 சமவாயம் ஏற்கப்பட்டுள்ளது. அதன் 10வது ஆண்டு நிறைவு 2021 இல் அமைந்தது.
வீட்டு வேலை செய்பவர் என்பவர் தனது தொழில் தருநரின் வீட்டில் வேலை செய்பவர். இது வீட்டு வேலைத்துறையின் முதல் விசேட அம்சம். இங்கே பொதுத்துறை மற்றும் தொழிலின் தனிப்பட்ட இயல்புக்கு இடையே முரண்பாடு உள்ளது. பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் பெண்கள் (83%), அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஒரு நபர் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லுதல் என்பது இதன் அர்த்தமாகும். சில புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் நவீன கால அடிமைத்தனம் போன்ற நிலைமைகளின் கீழ் பணியாற்றுகின்றனர்.
உலகப் பணியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் வீட்டுத் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும், அவர்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டு மறைக்கப்படுகின்றது. அவர்களில் பலர் சட்டரீதியான தொழிலின்றி, குறைந்த ஊதியத்துடன், அதிக நேரம் வேலை செய்வதுடன், இது பெரும்பாலும் சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்பின் வரம்பிலிருந்து அவர்களை விலக்குகிறது. சில சந்தர்ப்பங்களில் பாலியல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்தை கூட சந்திக்க நேரிடும்.
அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு தொழில்வாய்ப்பு: தடைகளும் தீர்வுகளும்
ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரைப் பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குக!
அரச சேவையில் ஆட்குறைப்பு திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்
‘சமத்துவத்திற்கான நேரம்’ அமைப்பினால் கடந்த சில வருடங்களாக லக்சம்பேர்க்கில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான சிறந்த வேலை பற்றிய பொது விழிப்புணர்வு சர்வதேச அளவிலும் அவதானத்திற்கு உள்ளானது. இலங்கையின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். கடந்த ஆண்டு கொவிட் நிலைமையுடன் பாரிய சவாலுக்கு உள்ளாகியுள்ள வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட முறைசாரா துறையில் பணிபுரிபவர்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களாக மாறியுள்ளனர், ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் இது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவு எடுப்பதாக தெரியவில்லை.
நாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணிபுரியும் தொழிலாளர் சமூகத்திற்கும் EPF / ETF மற்றும் நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு வழங்கப்படும் அதே தொழிலாளர் உரிமைகள் வழங்கப்படும் என அப்போதைய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். 2021ஆம் ஆண்டு தொழில் அமைச்சில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ப்ரொடெக்ட் சங்கத்தின் செயலாளர் கல்ப மதுரங்க எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்
“எமது தொழிற்சங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக இத்துறையில் உள்ள தொழிலாளர்கள் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் பிரதிபலனாக வீட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை, ETF / EPF ஆகக்குறைந்த சம்பள சட்டத்தில் தொழிலாளர்களாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் பணிக்கொடை முதலான விடயங்கள் தொடர்பில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள அப்போதைய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சம்மதித்தார். ஆனால் தற்போது நிமல் சிறிபால டி சில்வா இல்லை. அவருக்குப் பதிலாக மனுஷ நாணயக்காரவை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஜனாதிபதியினால் அமைச்சரை மாற்றுவதில் எமக்கு பயனில்லை. எமது போராட்டம் அமைச்சரவை மாற்றுவதில் இல்லை. போராட்டத்தை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தப் போராட்டத்தின் புத்தெழுச்சி இந்த 16ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். எமது அங்கத்தவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுடன் தொழில் திணைக்களத்தையோ அல்லது ஜனாதிபதி செலகத்தையோ முற்றுகையிடுவது உறுதி.
இம்முறை சர்வதேச வீட்டுத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முன்னெடிக்கப்படும் போராட்டத்திற்கு ‘பொருட்களின் விலையை தாங்க முடியாது - மக்களுக்கு நிவாரணம் வழங்குக', 'வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டப்பூர்வமாக்குங்கள்', 'அடக்குமுறை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம்', ‘மக்கள் அதிகாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற போராட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கல்ப மதுரங்க மேலும் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 85,000 பேர் வீட்டுப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். அன்றாடம் வாழ்வதுகூட பொதுவாக எல்லா மக்களுக்கும் பெரும் நெருக்கடியாகியுள்ள இவ்வேளையில், மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ‘வீட்டுத் தொழிலாளர்கள் உட்பட முறைசாரா துறை பணியாளர்கள் ‘ தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களின் அவதானம் செலுத்தப்பட வேண்டும்
சிங்களத்தில் – பி.டபிள்யு. முத்துகுடஆராச்சி
தமிழில் - ராஜா
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம், இந்த கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
அண்மையில் நாம் கவலைக்கிடமான செய்தியொன்றை அறிந்து கொள்ள நேரிட்டது. ஆனாலும் இது போன்ற செய்தியொன்றை நாம் அறிந்த கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புக்கு செல்வோரின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து இருக்கின்றது.
இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது.
கொவிட் 19 தொற்றுக்காக நீண்ட விடுமுறையின் பின்னர் மீண்டும் கல்வியியற் கல்லூரிகளுக்கு கற்கை நடவடிக்கைகைக்க திரும்பிய மாணவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட லொக்கர்கள் உடைக்கப்பட்டும், புத்தகங்கள், உடமைகள், மெத்தைகள் கிழிந்து நாசமாக்கப்பட்டிருப்பதையும் கண்டு பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
- வீட்டுப் பணியாளர்கள் பற்றி அரசாங்கத்திற்கு கவலையில்லை. - எதிர்க்கட்சிகளுக்கு ஞாபகம் வருவது தேர்தல் காலத்தில் மாத்திரமா?
- மரணித்து வரும் பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை வழங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குக!
- அரச நிவாரண கொடுப்பனவில் புறக்கணிக்கப்பட்ட முறைசாரா பிரிவின் ஊழியர்கள்!
- சர்வதேச மனித உரிமைகள் தினம்!