ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரைப் பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குக!

ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரைப் பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குக!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக புலம்பெயரும் சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது. 

இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கடற்படையினர் கடந்த ஆம் திகதி நண்பகல் அம்பாறை ஒகந்த கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் (06) உட்பட 26 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 சிறுவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறாக உள்ளதுடன் மேலும் நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 02 முதல் 60 வயதுடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாணம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம்,  இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படைக் குழு ஒன்று மாரவில பொலிஸாருடன் இணைந்து கடந்த 07 ஆம் திகதி காலை மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அப்போது அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து இந்த நாட்டிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் குடியேற தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யப்பட்டனர். அங்கு 13 ஆண்கள், ஒரு (01) சிறுவன் மற்றும் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் உட்பட 09 முதல் 58 வயதுக்குட்பட்ட பதினைந்து நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், ஒரு வேன், ஒரு கார்  ஆகியனவும் கைப்பற்றப்பட்டது.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது படைப்பிரிவின் P 481 படகின் அதிகாரிகள் ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் சிலாபம் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலை அவதானித்து ஆய்வு செய்தனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 58 ஆண்கள், 05 பெண்கள், 07 குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 06 நபர்கள் உட்பட 01 வயது முதல் 62 வயது வரையிலான 76 பேர் குறித்த படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில விடுதியில் இருந்து கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிலாபம் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 45 நபர்களுடன் (02) உள்ளூர் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு மூலம் 26 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகொன்றும், மேற்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 4வது துரித தாக்குதல் படகுகள் படையணியின் பீ 481 துரித தாக்குதல் படகு மூலம் 19 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்றும் கடந்த மே மாதம 27 ஆம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கடல் பயணத்திற்கு தகுதியற்றவை என அவதானித்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த பல நாள் மீன்பிடி படகுகளில் இருந்தவர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் கடல் மார்க்கமாக வேறு நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதுடன் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட தூண்டும் ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரையும் உடமைகளையும் பணயம் வைத்து தீவில் இருந்து இடம்பெயர்வதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது இவ்வாறான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பாழடைந்த மீன்பிடி கப்பல்கள் கடலுக்கு செல்லக்கூடியவை அல்ல என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இந்த கப்பல்கள் மூலம் இடம்பெயர்வதற்கு முயற்சிப்பது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என கடற்படையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை மனித கடத்தல்காரர்கள் அதிகளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர், கடலுக்குச் செல்லத் தகுதியற்ற கப்பல்கள் மூலம் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு இவ்வாறான ஆபத்தான மனித கடத்தலில் சிக்கி உயிரையும் உடமைகளையும் அழித்துக்கொள்வது மட்டுமன்றி சட்டத்தின் முன் குற்றவாளிகளாகுவதையும் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது. அத்தகைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணை கிடையாது. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள். அதன் படி, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் மற்றும் 15 இலங்கையர்களைக் கொண்ட இரு குழுக்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மே 24 மற்றும் ஜூன் 9 ஆம் திகதிகளில் அவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பின்னர் சட்டப்பூர்வமாக நாட்டிற்கு குடிபெயர்வதற்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image