மீண்டும் சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் இன்று (16) தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் வௌிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் தேவைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அபுதாபி தகவல்கள் வௌியாகியுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, 2021 மே 3 முதல், 'கொவிட் 19 அபாயமற்ற' நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால், வருகைத்தரும் நாள் மற்றும் 6 வது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பயணிகள் வருகையின் போது பி.சி.ஆர் பரிசோதனையையும், ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தலையும், நான்காவது நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் எடுக்க வேண்டும்.
கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்கு முன் பெற்று அல்ஹொஸ்ட் செயலியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அபுதாபி குடிமக்களுக்கும் வசிப்போருக்கும் இம்முறை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசி பெறாத கொவிட் 19 அபாயமற்ற' நாடுகளைச் சேர்ந்த அபுதாபிக்கு வந்தவுடன் தனிமைப்படுத்தல் இன்றி பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும், தொடர்ந்து 6ம் மற்றும் 12ம் நாட்களில் மீண்டும் பிசிஆர் பிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வருகையின் போது பி.சி.ஆர் பரிசோதனையையும், 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலையும், எட்டாவது நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது