வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கை பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் திருப்திகரமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொறுப்பாகும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய அமைப்பிற்குள் பல குறைபாடுகள் இருப்பதாகவும், சரியான திட்டங்களுடன் அவற்றை நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் நிலவுகின்ற பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான கலாநிதி சுகத் யாலேகம, பிரசாத் பியசேன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, பொது முகாமையாளர் டி டி பி சேனாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image