வேலைவாய்ப்பு மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்கள், போலியான வட்ஸ் அப் இணைப்புகளை உருவாக்கி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் இவ்வாறான மோசடிகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் துரித எண்ணிற்கும் 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் ஊடாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.