கனடா செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு நற்செய்தி!

கனடா செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு நற்செய்தி!

அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையான வௌிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

அதற்கமைய, அடுத்த ஆண்டு 411,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 401,000 பேருக்கு கனடா அரசு நிரந்த குடியுரிமை வழங்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நாட்டில் தற்காலிக குடியிருப்பாளர்களாக இருப்பவர்கள் என்று அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஷோன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு பயிற்சி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்களை அழைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக 2020ம் ஆண்டு 185,000 பேருக்கு மாத்திரமெ நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 45 வீதம் குறைவாகும். தற்போது கனடாவின் சனத்தொகை 45 38 மில்லியன் ஆகும். அதனை வருடாந்தம் ஒரு வீதத்தினால் அதிகரிப்பது கனடா அரசின் நோக்கமாகும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image