புலம்பெயர்வாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகள் முன்வைப்பு!

புலம்பெயர்வாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகள் முன்வைப்பு!

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தினத்தைக் குறிக்கும் வகையில், புலம்பெயர்வாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய மகஜரை அரச கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையளித்தல் மற்றும் வெளியிடுதல் நேற்று முன்தினம் (17) கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன மாகேவல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் (சர்வதேசம்) மங்கள ரந்தெனிய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி நிஷாந்த வர்ணசூரிய, புலம்பெயர் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கான தேசிய சபையின் உபதலைவர், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அடிகளார் உள்ளிட்ட தொழிற்சங்க, சிவில் சமூகப் பிரதிநிதிகள், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கிராமிய மட்டங்களில் செயற்படும் செயற்பாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றனர்.

கொவிட் பரவலின் பின்னர் புலம்பெயர்வாளர்கள் தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலையான புலம்பெயர்வு தொடர்பான உலகலாவிய சமவாயத்தினால் செய்யப்படுகின்ற சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகள் தொடர்பாக 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தேசிய மற்றும் கிராம மட்டங்களில் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சட்டத்தரணிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இரண்டு நாட்கள் இடம்பெற்ற செயலமர்வின் இறுதியின்போது இந்த மகஜர் முன்வைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க மைச்சின் மேலதிக செயலாளர் சந்தன மாகேவல, புலம்பெயர்வாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை பெரிதும் மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சின் செயலாளரின் ஊடாக இந்த யோசனை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், எனினும், இந்தப் பெருமளவான பரிந்துரைகளுள் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான பரிந்துரைகளை முறையாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கையொப்பத்துடன் தம்மிடம் கையளிப்பது மிகவும் பயனுடையதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புலம்பெயர்வாளர்களின் பிரச்சினை தொடர்பில் பிரதேச மட்டங்களில் தலையீடு செய்யும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைப்புகளை பதிவு செய்வதற்கான கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், பதிவுசெய்யும் அத்தியாவசிய தன்மை என்பன் தொடர்பில் அவதானம் செலுத்தி, தனியான யோசனைகளை மீள தயாரித்து மேலதிக செயலாளர் ஊடக அமைச்சின் செயலாளர் மூலம் அமைச்சரிடம் கையளிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு தாம் தலையீடு செய்வதாகவும், அதன்படி எதிர்காலத்தில் புலம்பெயர்வாளர்களின் இந்தப் பிரச்சினை தொடர்பில் செயற்படும் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி செயற்படுவதாகவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் (சர்வதேசம்) மங்கள ரந்தெனிய கருத்து தெரிவிக்கையில், சில சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோதும் புலம்பெயர்வாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமது பணியகம் உள்ளிட்ட அரசாங்கம் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், புலம்பெயர்வாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் முதன்முதலில் அந்த புலம்பெயர்வாளர்களின் உரிமைகளுக்காக செயற்படும் பிரதிநிதிகளால் எதிர்கொள்ளப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் தற்போதுவரை கிரமமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக நிறுவப்பட்டுள்ள புலம்பெயர்வாளர்களுக்கான தேசிய செயற்பாட்டு குழு, இப்போவது செயலிழந்து உள்ளமையினால், அதனை மீள கட்டியெழுப்பி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பிரதிநிதித்துவடன், செயற்படுத்துவதாகவும், அத்துடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரண்டு ஆண்டு வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் மேலதிக பொது முகாமையாளர் ஆகியோர் பங்கேற்ற இந்த கலந்துரையாடலில், பிரதேச செயலக காரியாலயங்களில் இந்தப் பிரச்சினை தொடர்பில் தலையீடு செய்யும் அரச அதிகாரிகளின் அலட்சியப்போக்கை தவிர்ப்பதற்கும், இந்த செயற்பாட்டாளர்களின் செயல்பாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சு மட்டத்தில் அறிவுறுத்த இணங்கப்பட்டது.

DSCF5101.jpg

DSCF5119.jpg

DSCF5127.jpg

DSCF5184.jpg

DSCF5207.jpg

DSCF5197.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image