வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டுகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டுகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப். 5) தனது எல்லை நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.

 

பல்வேறு வகைகளின்கீழ் நாடுகள் மற்றும் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, பிரிவுகள் III மற்றும் IV ஆகிய நாடுகள் மற்றும் பகுதிகளை சேர்ந்தோர் அங்கிருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கிருமித்தொற்றுக்கான சோதனை எடுக்க வேண்டும், அதே நேரத்தில் I மற்றும் II பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகளிலிருந்து விலக்கு பெற்றனர்.

ஆனால், வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல், ஹாங்காங், மக்காவ், சீனா மற்றும் தைவான் ஆகியவை மட்டுமே பிரிவு I என்றும், இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகள் வருகையின்போது மட்டும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வாசிகளுக்கு பொருந்தும் என சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

பிரிவு II, III, IV ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகள் மற்றும் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கட்டாய PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்தக் கட்டுப்பாடு வரும் செப். 9ஆம் திகதி, இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும்.

முழுமையான விவரம் இதோ:

 

screenshot01.png

 

மூலம் தமிழ்மைக்செட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image