கொழும்பில் இருந்து பரீஸ் நகருக்கான விமானசேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
269 ஆசனங்களுடன் கூடிய A 330-300 இலக்க விமானம் இச்சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன், வௌ்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இலங்கையில் இருந்து பிரான்ஸின் பரீஸ் நகர் நோக்கி இவ்விமானம் செல்லும் என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.