வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்பலாம்

வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்பலாம்

​வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வர முடியும் என்று சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதுவரையில் நாட்டுக்கு வர தயாராக இருக்கும் இலங்கையர்கள் வெளிவிகார அமைச்சில் அனுமதி பெற்று பதிவு செய்துக்கொள்ளவேண்டும், ஆனால் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கட்டுநாயக்க விமானநிலையத்தில் 3500 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய வசதி காணப்படுகின்றமையினால் நாளொன்றுக்கு 3500 இலங்கையர்கள் மட்டுமே வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரமுடியும் என்றும் அதிகாரசபை சுட்டி்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image