புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து கலந்துரையாடல்

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து கலந்துரையாடல்

தினமும் 500 தொடக்கம் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்து வருவதாக இராணுவத தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அழைத்து வரப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒக்டோபர் மாத ஆரம்பப் பகுதியில் கொவிட் 19 இரண்டாம் அலை ஏற்பட்டதையடுத்து வௌிநாடுகளில் நிர்கதியாகியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் நவம்பர் மாதம் 16ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது தினமும் 250 புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image