தனியார் துறையில் ஊழல் தொடர்பான ஆய்வு அறிக்கை TISL இனால் வெளியீடு

தனியார் துறையில் ஊழல் தொடர்பான ஆய்வு அறிக்கை TISL  இனால் வெளியீடு

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது தனியார் துறையில் ஊழல் தொடர்பான முக்கிய ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.


ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) டிசம்பர் 12 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'Corruption Risk Mapping Research: A Study on Sri Lanka’s Private Sector' என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அது இலங்கையின் தனியார் துறையில் உள்ள ஊழல் அபாயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை முன்வைக்கிறது. ஒரு சுயாதீன ஆய்வாளரால் தொகுக்கப்பட்ட இந்த ஆய்வு, இலங்கையில் முதன்முறையாக தனியார் துறை ஊழல் குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட அனுபவங்களையும் உதாரணங்களையும் ஆவணப்படுத்தி, அவற்றை விவரிக்கிறது.

இலங்கையில், ஊழல் என்பது அரச துறையின் ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், தனியார் துறை பெரும்பாலும் ஊழலின் "விநியோக பக்கம்" ஆக செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அரச துறையுடன் தொடர்பு கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் பரிவர்த்தனை செய்யும் அனைத்து தொழில்துறைகளிலும், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் கட்டத்தில் ஊழலுக்கான அதிக அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன், அரசாங்க ஒப்பந்தங்களுக்கு ஏலம் விடும்போது, குறிப்பாக மருந்துகள் மற்றும் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.

தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் இலஞ்சம், கையூட்டு மற்றும் சலுகைகள், மோசடி, கொள்முதல் செயல்முறைகளின் தவறான நிர்வாகம், விருப்புசார் முரண்பாடு, பக்கச்சார்பு மற்றும் பாரபட்சம் ஆகியவை அடங்கும். ஆர்வமூட்டும் வகையில், ஏகபோக உருவாக்கம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் சந்தை ஆட்சி (market manipulation) குறித்த விடயங்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பாலினமும் ஊழலின் தன்மையை பாதிக்கிறது என்று ஆய்வில் வெளிப்படுத்தப்படுகிறது. வேலைகள், பதவி உயர்வுகள் அல்லது ஒரு சேவையை வழங்குவதற்கான ஈடாக, பாலியல் இலஞ்சம் கோரப்படுவதற்கான அதிக அபாயத்தில் பெண்கள் இருப்பதாக பதிலளித்தவர்கள் குற்றம் சாட்டினர்.

பட்டியலிடப்பட்ட பொதுக் கம்பெனிகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், அவற்றின் பட்டியலிடப்படாத துணை நிறுவனங்கள் குறைவான விதிமுறைகளுக்கே உட்படுகின்றன என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இதனால், தாய் கம்பெனிகள் தங்கள் ஊழலை ஒரு துணை அல்லது உப-துணை நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்ய உதவுகிறது. வலுவான ஒழுங்குமுறை, உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் வழக்கமான நிதி மற்றும் சமூக கணக்காய்வுகள் இல்லாதது தனியார் துறை ஊழலுக்கு வழிவகுக்கும் அபாயக் காரணிகளாக அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. உகந்த வணிகச் சூழல் இல்லாததால், புதிதாக சந்தைக்கு வருபவர்கள் இருப்பைத் தக்கவைப்பதற்கான வழிமுறையாக ஊழலை நாடுகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

விசில்-ப்ளோயர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிற வலுவான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கொள்கைகளை தனியார் துறை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஊழலை குறைக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. வலுவான ஒழுங்குமுறை அமைப்புகளை நிறுவுதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தனியார் துறையில் ஊழலைக் குறைக்க அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து “Beyond Compliance: True Business Integrity in a Box-Ticking World” என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் சுயாதீன மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக கடமையாற்றும் திருமதி அவெரில் லுடோவிக் மற்றும் கார்கில்ஸ் சிலோன் நிறுவனத்தின் கூட்டாண்மை சட்ட சிரேஷ்ட முகாமையாளர், ருக்ஷானி வனிகசேகர ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்ததுடன், இந்த அமர்வு USAID இன் ஆதரவுடன் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறும் ஆட்சித் திட்டத்தின் தலைவர் திரு. கௌதமன் பாலச்சந்திரன் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது.

May be an image of 1 person, dais and text

May be an image of 4 people, table, lighting and text

May be an image of 11 people and table

May be an image of text that says "A eeииoHblи PRIVATESECTOR PRIVATE STUDY MAPPINGRESEARCH: MAPPING GANSPARENCY DYONSRILANKA'S SECTOR CORRUPTIONRISK ON RESEARCH: RISK ONSRI LANKA'S 's ធ្3ាះ្មសា WEANCOR5NAY SECTOR SECTORLRC ON-SERISK ANK OO OU CIPE PRIVATE A STUDY SECTOR CORRUPTIONRISK ONSRILANKA MAPPING ORRUPTIONRIDCL ON SRI TRANATIONAL LANKA TRANSPARENCY RESEARCH: GRESFARCH: LANKA'S SRI RISK"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image