சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில் மூன்றாம் அலை- எச்சரிக்கும் PHI

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில் மூன்றாம் அலை- எச்சரிக்கும் PHI

அரசாங்கமும் சுகாதார அமைச்சும் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்ற தவறும்பட்சத்தில கொவிட் 19 மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் போக்குவரத்து தடை மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் இன்னும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இந்நிலை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. உயிர்த்த ஞாயிறு மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாடு தயாராகி வருகிறது. ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று குறித்த மிக அவதானத்துடன் செயற்படுகின்றனர். திரிபடைந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் அந்நாடுகள் தடுமாறுகின்றன.

இந்நிலையில் போக்குவரத்து உட்பட பல விடயங்களில் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு உரிய கட்டுப்பாடுகளை விதிக்காவிடின் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது என்று உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது மக்களுக்கும் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கும் புதிய சுகாதார விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். கொள்கை ரீதியான முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் மே அல்லது ஜூன் இறுதியில் நாடு மிக அபாயகரமான நிலையை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெய்லி மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image