C190 பிரகடனத்திற்கு அமைச்சரவை அனுமதி

C190 பிரகடனத்திற்கு அமைச்சரவை அனுமதி

சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் கடந்த 2019ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட C190 மற்றும் இரு பிரகடனங்களை இலங்கையில் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர் தாபனத்தின் ஆரம்பகால அங்கத்துவ நாடாகிய இலங்கை தொழிலாளர்ளின் நன்மை மற்றும் பாதுகாப்பு கருதி குறித்த பிரகடனத்தை இலங்கையில் சட்டமாக கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளத்தின் 106வது அமர்வில் அனுமதிக்கப்பட்ட சமாதானம் மற்றும் வன்முறையை ஒழிப்பதற்கான முன்மொழிவு மற்றும் 2019 மாநாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 108 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணியுலகில் வன்முறை மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான C190 பிரகடனம் மற்றும் அதனுடன் சேர்ந்து 206 முன்மொழிவுகள் என்பவற்றை இந்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் சட்டத்தொகுதியில் உள்வாங்குதவற்கும் அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சங்கமொன்றின் ஏற்பாட்டில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

 

C190 பிரகடனத்திற்கு இலங்கையில் அனுமதி கிடைத்தமையை தொழிற்சங்க மகளிர் தின நிகழ்வில் கூற வாய்ப்பு கிடைத்தமை வரலாற்றில் பதிய ​வேண்டிய விடயம். அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற இப்பிரகடனம் பாராளமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றியம் மற்றும் தொழில் அமைச்சின் ஆலோசனை குழு என்பவற்றில் கலந்துரையாடி துறைசார் நிபுணர்களின் ஆலோசனைக்கமைய இலங்கைக்கு ஏற்றாற்போல் எதிர்வரும் மகளிர் தினம் கொண்டாடும் போது இலங்கையில் இப்பிரகடனம் நிறைவேற்ற முடியுமாகும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image