அடையாளங்காணப்படும் தொற்றாளர்களில் 95 வீதமானவர்களுக்கு டெல்டா

அடையாளங்காணப்படும் தொற்றாளர்களில் 95 வீதமானவர்களுக்கு டெல்டா

இலங்கையில் தற்போது அடையாளங்காணப்படுகிற கொவிட் 19 தொற்றாளர்களில் 95 வீதமானவர்கள் டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது என்று ஶ்ரீஜயவர்தன பல்கலைக்கழக பேராசிரியர் ஜீவந்தரன தெரிவித்துள்ளார்.

இவ்வாய்பில் பேராசிரியர் நீலிகா மலவிகேயும் கலந்துகொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண ரீதியாக பார்க்கும் போது பெறப்பட்ட மாதிரிகளுக்கமைய 84 தொடக்கம் 100 வீதம் வரை டெல்டா திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம்,ஊவா மாகாணங்களில் நூறு விதம் டெல்டா திரிபு பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் பேராசிரியர் ஜீவந்தரன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image